/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டில்லி போலீஸ் அதிகாரி போல் பேசி புதுச்சேரி நபரிடம் ரூ. 2 லட்சம் மோசடி

ADDED : ஜூலை 14, 2025 03:35 AM
புதுச்சேரி : கிருமாம்பாக்கத்தை சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், டில்லி போலீஸ் அதிகாரி போல் பேசியுள்ளார்.
அதில், அந்த நபர் பெயரில் பண மோசடி நடந்திருப்பதாகவும், அது தொடர்பாக சைபர் கிரைமில் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வழக்கில் இருந்து விடுவிக்க பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதை நம்பிய அவர் 2 லட்சத்து 6 ஆயிரத்து 200 ரூபாய் அனுப்பி இழந்துள்ளார்.
முதலியார்பேட்டை சேர்ந்த நபர் 17 ஆயிரம், கரையாம்புத்துாரை சேர்ந்த பெண் 7 ஆயிரம், குயவர்பாளையத்தை சேர்ந்த நபர் 87 ஆயிரம், லாஸ்பேட்டையை சேர்ந்த பெண் 25 ஆயிரம், பனையடிக்குப்பத்தை சேர்ந்த பெண் 7 ஆயிரத்து 918, வேல்ராம்பட்டை சேர்ந்த பெண் 16 ஆயிரத்த 700, என, மொத்தம் 7 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 3 லட்சத்து 66 ஆயிரத்து 818 ரூபாய் இழந்துள்ளனர்.
புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.