sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 புதுச்சேரி நபரிடம் ரூ.38 லட்சம் மோசடி

/

 புதுச்சேரி நபரிடம் ரூ.38 லட்சம் மோசடி

 புதுச்சேரி நபரிடம் ரூ.38 லட்சம் மோசடி

 புதுச்சேரி நபரிடம் ரூ.38 லட்சம் மோசடி


ADDED : பிப் 19, 2026 05:09 AM

Google News

ADDED : பிப் 19, 2026 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் சைபர் மோசடி கும்பலிடம் 4 பேர் ரூ.38.21 லட்சம் ஏமாந்துள்ளனர்.

புதுச்சேரி, சுதானா நகரைச் சேர்ந்தவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைனில் டிரேடிங் செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அதைநம்பிய அவர், மர்மநபர் தெரிவித்த போலி ஆன்லைன் டிரேடிங்கில் பல்வேறு தவணைகளாக ரூ.38 லட்சம் முதலீடு செய்து, அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன் பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.

உருளையன்பேட்டையை சேர்ந்தவர், இன்ஸ்டாகிராமில் பழைய நாணயம் விற்பனை தொடர்பான விளம்பரத்தைப் பார்த்தார். பின், தன்னிடம் உள்ள நாணயத்தை விற்க அதில் இருந்த வாட்ஸ் ஆப் எண்ணில் நாணயத்தின் படத்தை பகிர்ந்து அதன் மதிப்பு குறித்து கேட்டார். சிறிது நேரத்திற்குப் பின், அவரை தொடர்பு கொண்ட மர்மநபர் நாணயத்தின் மதிப்பு ரூ. 96 லட்சம் என, தெரிவித்தார். இதை நம்பிய, அவர் நாணயத்தை விற்பனை செய்ய பதிவு மற்றும் அஞ்சல் கட்டணங்களுக்காக ரூ.8 ஆயிரத்து 950 அனுப்பி உள்ளார். அதன்பின், மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதேபோல், உருளையன்பேட்டையை சேர்ந்தவர் 8 ஆயிரத்து 600, முத்தியால்பேட்டையை சேர்ந்த பெண் 3 ஆயிரத்து 698, என, மொத்தம் 4 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 38 லட்சத்து 21 ஆயிரத்து 248 இழந்துள்ளனர். புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us