/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆன்லைனில் கார் விற்பதாக புதுச்சேரி நபரிடம் ரூ.12 லட்சம் மோசடி
/
ஆன்லைனில் கார் விற்பதாக புதுச்சேரி நபரிடம் ரூ.12 லட்சம் மோசடி
ஆன்லைனில் கார் விற்பதாக புதுச்சேரி நபரிடம் ரூ.12 லட்சம் மோசடி
ஆன்லைனில் கார் விற்பதாக புதுச்சேரி நபரிடம் ரூ.12 லட்சம் மோசடி
ADDED : நவ 01, 2025 02:09 AM
புதுச்சேரி: ஆன்லைன் செயலியில் கார் விற்பதாக கூறி, ரூ.11.85 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர் பிரசன்னா பூட்டோரியா,56; மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியின் நிர்வாக இயக்குநரான இவர், கடந்தாண்டு இறுதியில் பழைய கார் வாங்க ஓ.எல்.எக்ஸ்., செயலியை பார்த்தார்.
அதில், டி.எல் 3 சிசி 0704 பதிவெண் கொண்ட, போர்ஷே காரை தேர்வு செய்த, பிரசன்னா பூட்டோரியா, கார் உரிமையாளரான பெங்களூருவை சேர்ந்த சையதுவிற்கு, மூன்று தவணைகளாக ரூ.11.85 லட்சத்தை ஆன்லைனின் செலுத்தினார். அப்போது, காரை, புதுச்சேரிக்கு கொண்டு வந்து டெலிவரி செய்வதாக சையது கூறினார். ஆனால், டெலிவரி செய்யவில்லை. பின், அவரை போன் மற்றும் ஆன்லைனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரசன்னா பூட்டோரியா, இதுகுறித்து நேற்று முன்தினம் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.