/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விடுதலை நாளையொட்டி மக்கள் மன்றம் நிகழ்ச்சி ரத்து
/
விடுதலை நாளையொட்டி மக்கள் மன்றம் நிகழ்ச்சி ரத்து
ADDED : நவ 01, 2025 02:09 AM
புதுச்சேரி: விடுதலை நாளையொட்டி, இன்று (1ம் தேதி) போலீஸ் ஸ்டேஷன்களில் நடைபெற இருந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குறைகளை கேட்கும், மக்கள் மன்றம் நிகழ்ச்சி, புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில், வாரந்தோறும் சனிக்கிழமை நடந்து வருகிறது. அதில், போலீஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரியின் விடுதலை நாள் விழா, இன்று (1ம் தேதி) கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, இன்று, மக்கள் மன்றம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் சனிக்கிழமை வழக்கம் போல், மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

