/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு புதுச்சேரி நபரிடம் ரூ. 56 லட்சம் மோசடி
/
போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு புதுச்சேரி நபரிடம் ரூ. 56 லட்சம் மோசடி
போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு புதுச்சேரி நபரிடம் ரூ. 56 லட்சம் மோசடி
போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு புதுச்சேரி நபரிடம் ரூ. 56 லட்சம் மோசடி
ADDED : டிச 04, 2025 05:10 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் சைபர் மோசடி கும்பலிடம் பெண் உட்பட 8 பேர் ரூ. 65.34 லட்சம் ஏமாந்துள்ளனர்.
புதுச்சேரி, ஜி.என்.பாளையத்தை சேர்ந்தவரை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் டிரேடிங் செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார்.
இதைநம்பி, அவர் மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் டிரேடிங்கில் பல்வேறு தவணைகளாக ரூ. 56 லட்சத்து 19 ஆயிரத்து 500 முதலீடு செய்துள்ளார். பின், அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து, அதன்மூலம்வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. அதன் பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
லாஸ்பேட்டையை சேர்ந்த பெண், ஆன்லைனில் வேலை தேடியுள்ளார். இதையடுத்து, வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், பிரபல ஐடி கம்பெனியில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். மேலும், அந்த கம்பெனியில் காலி பணியிடம் உள்ளதாகவும், அப்பணியினை உறுதி செய்ய முன்பணம் செலுத்தும்படி கூறியுள்ளார்.
இதை உண்மை என நம்பிய அப்பெண் மர்மநபருக்கு ரூ.3 லட்சம் அனுப்பியுள்ளார். அதன்பின், அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் 4 லட்சத்து 5 ஆயிரம், லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 85 ஆயிரம், அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் 22 ஆயிரம், மூலக்குளத்தை சேர்ந்தவர் 41 ஆயிரத்து 400, வாணரப்பேட்டைச் சேர்ந்தவர் 26 ஆயிரத்து 460, கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் 35 ஆயிரம் என 8 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 65 லட்சத்து 34 ஆயிரத்து 360 இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

