/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் திருப்பணிக்கு பெயிண்ட் வழங்கல்
/
கோவில் திருப்பணிக்கு பெயிண்ட் வழங்கல்
ADDED : டிச 04, 2025 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: சோரப்பட்டு பேட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்கு சமூக சேவகி அண்ணா பிரபாவதி ரூ. 2 லட்சம் மதிப்பிலான பெயிண்ட் மற்றும் உபகரணப் பொருட்களை வழங்கினார்.
திருபுவனை தொகுதிக்கு உட்பட சோரப்பட்டு பேட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருப்பணி நடந்து வருகிறது. கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சமூகசேவகி அண்ணா பிரபாவதி, தனது சொந்த பணம் ரூ. 2 லட்சம் செலவில் கோவில் திருப்பணிக்கு தேவையான பெயிண்ட் மற்றும் அதற்கு தேவையான உபகரணப் பொருட்களை திருப்பணி கமிட்டி நிர்வாகிகளிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சாய்சரவணன்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

