/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சிக்கு எம்.எல்.ஏ., மனு
/
தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சிக்கு எம்.எல்.ஏ., மனு
தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சிக்கு எம்.எல்.ஏ., மனு
தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சிக்கு எம்.எல்.ஏ., மனு
ADDED : டிச 04, 2025 05:10 AM
புதுச்சேரி: லாஸ்பேட்டை பகுதியில் போர்க்கால அடிப்படையில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
லாஸ்பேட்டையில் பல ஆண்டுகளாகவே தெருநாய் தொல்லை உச்சக்கட்டத்தில் உள்ளது. குறிப்பாக ஜீவானந்தபுரம், குறிஞ்சி நகர், குமரன் நகர் அசோக் நகர், நெருப்பு குழி, சாந்தி நகர், நெசவாளர் நகர், ஆனந்தா நகர், வள்ளலார் நகர், பெத்துசெட்டிப்பேட்டை, நேருவில் நகர், லாஸ்பேட்டை, சேத்திலால் நகர், மடுவுபேட் பகுதிகளில் தெரு நாய் தொல்லை அதிகரித்துள்ளது. குழந்தைகள்,முதியோர்களை துரத்தி கடிக்க பாய்கின்றன.
பல தெருக்களில் பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.தற்போது தான் உழவர்கரை நகராட்சி சார்பில், தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், தெருநாய் கட்டுப்படுத்துவதில் வேகம் இல்லை.
எனவே போர்க்கால அடிப்படையில் லாஸ்பேட்டை பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும். அவற்றிற்கு நோய் தடுப்பூசி போட வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

