/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அமைச்சரிடம் புதுச்சேரி எம்.எல்.ஏ., மனு
/
மத்திய அமைச்சரிடம் புதுச்சேரி எம்.எல்.ஏ., மனு
ADDED : நவ 06, 2024 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமானம் இயக்ககோரி கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., மத்திய அமைச்சரை சந்தித்து மனு வழங்கினார்.
புதுச்சேரி காலாப்பட்டு எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் டெல்லி சென்று அங்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சாரப்பு ராம் மோகன் நாயுடுவை நேரில் சந்தித்து, அவரிடம் புதுச்சேரியில் இருந்து கண்ணுார் , டெல்லி, சீரடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமானங்களை உடன் திட்டத்தின் கீழ் இயக்க கோரிக்கை மனு வழங்கினார்.
மனுவினை பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.