/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி எம்.பி.,க்கு ஏனாமில் எதிர்ப்பு 'கோ பேக்' கோஷத்தால் பரபரப்பு
/
புதுச்சேரி எம்.பி.,க்கு ஏனாமில் எதிர்ப்பு 'கோ பேக்' கோஷத்தால் பரபரப்பு
புதுச்சேரி எம்.பி.,க்கு ஏனாமில் எதிர்ப்பு 'கோ பேக்' கோஷத்தால் பரபரப்பு
புதுச்சேரி எம்.பி.,க்கு ஏனாமில் எதிர்ப்பு 'கோ பேக்' கோஷத்தால் பரபரப்பு
ADDED : பிப் 25, 2026 05:28 AM
புதுச்சேரி: புதுச்சேரி காங்., தலைவர் வைத்திலிங்கத்தை உள்ளே நுழைய விடாமல், ஏனாம் மக்கள் திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி காங்., கட்சியினர் வரும் சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாகும் பொருட்டு, 'புதுச்சேரிக்கான நடைபயணம்' தொகுதி வாரியாக நடத்தி வருகின்றனர். நடைபயணத்தின் போது, காங்., கட்சியினர் என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசில் நடைபெற்று வரும் ஊழல் முறைகேடுகளை மக்களுக்கு விளக்கி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று, புதுச்சேரி பிராந்தியமான ஏனாமிற்கு நடைபயணம் மேற்கொள்ள காங்., மாநில தலைவரான வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் சென்றனர்.
அப்போது, ஏனாம் பிராந்தியம் தரியால திப்பா கிராம மக்கள், தங்கள் கிராமம் வழியாக கடலுக்கு செல்லும் ஓ.என்.ஜி.சி., குழாயில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கோரி போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.
அதனை அறிந்த வைத்திலிங்கம், நாராயணசாமி உள்ளிட்ட காங்., கட்சியினர் போராட்டம் நடந்த இடத்திற்கு சென்றனர். காங்., எம்.பி., வைத்திலிங்கத்தை பார்த்த கிராம மக்கள், தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு ஓ.என்.ஜி.சி., நிர்வாகத்திடம் இருந்து இழப்பீடு பெற்று தரக்கோரி, பாராளுமன்றத்தில் பேச வேண்டி மூன்று முறை கடிதம் கொடுத்தும் நீங்கள் பேசவில்லை.
இழப்பீடு கோரி, கடந்த 100 நாட்களாக நாங்கள் போராடி வருகிறோம். அப்போதெல்லாம் வராத நீங்கள் இப்போது ஏன் வந்தீர்கள் எனக் கேட்டு, கிராமத்திற்குள் உள்ளே வர எதிர்ப்பு தெரிவித்து, 'கோ பேக் எம்.பி'., 'கோ பேக் எம்.பி.,' என கோஷமிட்டனர். இதனால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
போலீசார், கிராம மக்களை சமாதானப்படுத்த முயன்றனர். அதனை கிராம மக்கள் ஏற்க மறுத்து தொடர்ந்து கோஷமிட்டதால், காங்., கட்சியினர் அந்த கிராமத்திற்குள் செல்லாமல் திரும்பி சென்றனர்.
ஏனாமில், காங்., கட்சியினரை கிராமத்திற்குள் விடாமல், திருப்பி அனுப்பிய சம்பவம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

