/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய பதிவாளர் ஜெனரலுடன் புதுச்சேரி எம்.பி., சந்திப்பு
/
இந்திய பதிவாளர் ஜெனரலுடன் புதுச்சேரி எம்.பி., சந்திப்பு
இந்திய பதிவாளர் ஜெனரலுடன் புதுச்சேரி எம்.பி., சந்திப்பு
இந்திய பதிவாளர் ஜெனரலுடன் புதுச்சேரி எம்.பி., சந்திப்பு
ADDED : மார் 22, 2025 03:33 AM

புதுச்சேரி: புதுச்சேரி செல்வகணபதி எம்.பி., இந்திய பதிவாளர் ஜெனரல் மிருதுஞ்சய் குமார் நாராயணனை நேரில் சந்தித்து பேசினார்.
புதுச்சேரி மாநிலம் முழுதும் உள்ள காட்டுநாயக்கன், மலைக்குரவன் மற்றும் குருமன்ஸ் சமூகத்தினரையும், ஏனாம் பகுதியில் உள்ள 'எருகுல' சமூகத்தினரையும் பழங்குடியினராகச் சேர்க்கும் திட்டத்தை இந்திய பதிவாளர் ஜெனரல் ஆராய்ந்து வருகிறார்.
இந்நிலையில், புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி., செல்வகணபதி, இந்திய பதிவாளர் ஜெனரல் மிருதுஞ்சய் குமார் நாராயணனை சந்தித்து பேசினார். அதில், ஏனாம் பகுதியில் உள்ளது போன்று, புதுச்சேரியிலும் எருகுல சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அதன்படி, எருகுல சமூகத்தை சேர்ந்த 125 குடும்பங்கள் ஏனாமிலும், 80 குடும்பங்கள் புதுச்சேரியிலும் வசித்து வருகின்றனர்.
அதனை, புதுச்சேரியில் ஆய்வுக்கு வந்த மானுடவியலாளர் சத்தியநாராயணன், சமர்ப்பித்த அறிக்கையில் எருகுல சமூக மக்களின் எண்ணிக்கையைக் கண்டறிந்து ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் எருகுல சமூக மக்கள் புதுச்சேரி மற்றும் ஏனாம் ஆகிய 2 பிராந்தியங்களிலும் வசித்து வருவது உறுதியாகியுள்ளது.
எனவே, காட்டுநாயக்கன், மலைக்குறவன், குருமன்ஸ் சமூகத்தினருடன் புதுச்சேரியில் வாழும் எருகுல சமூகத்தினரையும் சேர்த்து பழங்குடியினராக அறிவிக்க வேண்டும். இதுகுறித்து, உடனடியாக ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுகொண்டார்.