/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடிக்காசு வசூலிக்கும் முறை தற்காலிக நிறுத்தம் புதுச்சேரி நகராட்சி அறிவிப்பு
/
அடிக்காசு வசூலிக்கும் முறை தற்காலிக நிறுத்தம் புதுச்சேரி நகராட்சி அறிவிப்பு
அடிக்காசு வசூலிக்கும் முறை தற்காலிக நிறுத்தம் புதுச்சேரி நகராட்சி அறிவிப்பு
அடிக்காசு வசூலிக்கும் முறை தற்காலிக நிறுத்தம் புதுச்சேரி நகராட்சி அறிவிப்பு
ADDED : ஜூலை 25, 2025 02:36 AM
புதுச்சேரி: நகரப்பகுதி பொது வெளியில் அடிக்காசு வசூலிக்கும் முறையை தற்காலிக நிறுத்தப்படுவதாக புதுச்சேரி நகராட்சி அறிவித்துள்ளது.
ஆணையர் கந்தசாமி செய்திக்குறிப்பு:
புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது வெளி, சாலையோரம் மற்றும் அங்காடிகள் அருகில் செயல்படும் தள்ளுவண்டி கடைகளுக்கு நகராட்சியின் சட்டவிதிகளின் படி, அடிக்காசு வசூலிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதற்காக, ஆண்டுதோறும் மின்னணு ஏலம் மூலம் ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அடிக்காசு வசூலிக்கப்பட்டு வருகிறது.
சமீப காலமாக பெருகி வரும் சுற்றுலா பயணிகளின் வருகையையொட்டி, அனுமதியின்றி சாலையோர வியாபாரங்கள் பெருகிவிட்டது. அதற்கு ஏதுவாக அடிக்காசு ரசீதினை தவறாக பயன்படுத்துவதாக அறியப்படுகிறது.
எனவே, அனைத்து வகையான சாலையோர வியாபாரங்களை கட்டுப்படுத்தி ஒழுங்குமுறை படுத்துவதற்கு ஏதுவாக தற்போது நடைமுறையில் உள்ள அடிக்காசு வசூலிக்கும் முறை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
இந்த உத்தரவு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே, அனைத்து வகையான சாலையோர வியாபாரிகள் யாருக்கும் அடிக்காசு செலுத்த தேவையில்லை. மாறாக, நகராட்சியிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே தற்காலிக கடை அல்லது நடமாடும் சிறு வியாபாரம் நடத்த வேண்டும்.
இந்த அறிவிப்பு கண்ட ஒரு வார காலத்திற்குள் அனுமதியின்றி சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தள்ளுவண்டிகள், கடைகள் உடனடியாக அப்புறப்படுத்த கோரப்படுகிறது.
தவறும் பட்சத்தில் நகராட்சி மூலம் எந்தவித முன் அறிவிப்புமின்றி வைக்கப்பட்டுள்ள கடைகள், தள்ளுவண்டிகள், வியாபார கட்டமைப்புகள் ஆகியவை அகற்றப்பட்டு, அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.