/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி தேசிய சுகாதார திட்ட ஊழியர்கள் போராட்டம் 'வாபஸ்'
/
புதுச்சேரி தேசிய சுகாதார திட்ட ஊழியர்கள் போராட்டம் 'வாபஸ்'
புதுச்சேரி தேசிய சுகாதார திட்ட ஊழியர்கள் போராட்டம் 'வாபஸ்'
புதுச்சேரி தேசிய சுகாதார திட்ட ஊழியர்கள் போராட்டம் 'வாபஸ்'
ADDED : பிப் 19, 2026 05:11 AM
புதுச்சேரி: புதுச்சேரி தேசிய சுகாதார திட்ட ஊழியர்களுக்கு 15,000 ரூபாய் வரை ஊதிய உயர்வு மற்றும் 5 சதவீதம் ஆண்டு ஊதிய உயர்வு வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி தேசிய சுகாதார திட்ட ஊழியர்கள் சங்கதலைவர் ஜூலி சாரா, செயல் தலைவர் வெற்றி, பொதுச் செயலாளர் பிரகதீஸ்வரன், பொருளாளர் தனலட்சுமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை;
புதுச்சேரி சுகாதாரத் துறை தேசிய சுகாதாரத் திட்ட ஊழியர்கள், பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி, பேரணியாக சென்று, கவர்னர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் ஏற்பாட்டின் பேரில், ஊழியர்களுடன், சுகாதாரத்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், ஏற்கனவே அரசு அறிவித்திருந்த ரூ.10,000, ரூ.12,000 மற்றும் ரூ.15,000 ஆகிய ஊதிய உயர்வுத் தொகையை உடனடியாக வழங்குவது, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட வேண்டிய 5 சதவீத ஆண்டு ஊதிய உயர்வையும் சேர்த்து வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பை ஏற்று, தற்காலிகமாகப் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும், பணி நிரந்தரம் மற்றும் இதர உரிமைகள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்றும், பேச்சு வார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை என்றால், மீண்டும் போராட்டத்தைத் தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

