sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி புதிய சட்டசபை கட்டும் விவகாரம் கவர்னர் - சபாநாயகர் இடையே மோதல்

/

புதுச்சேரி புதிய சட்டசபை கட்டும் விவகாரம் கவர்னர் - சபாநாயகர் இடையே மோதல்

புதுச்சேரி புதிய சட்டசபை கட்டும் விவகாரம் கவர்னர் - சபாநாயகர் இடையே மோதல்

புதுச்சேரி புதிய சட்டசபை கட்டும் விவகாரம் கவர்னர் - சபாநாயகர் இடையே மோதல்


ADDED : பிப் 22, 2024 11:30 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய சட்டசபை கட்டும் விவகாரத்தில் கவர்னர்-சபாநாயகர் இடையே மோதல் வெடித்துள்ளது.

பாரம்பரியமிக்க புதுச்சேரி சட்டசபை 200 ஆண்டுகள் பழமையானது. இக்கட்டடம் தற்போது பலவீனமாக உள்ளது. இதனால் புதுச்சேரியை ஆளும் என்.ஆர். காங்.,-பா.ஜ., கூட்டணி அரசு தட்டாஞ்சாவடியில் ரூ. 600.37 கோடி மதிப்பில், தலைமை செயலகத்துடன் கூடிய புதிய கட்டடம் கட்ட முடிவு செய்துள்ளது.

ஆட்சி பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நெருங்கும் சூழ்நிலையில் இன்னும் புதிய சட்டசபை கட்டும் பணி ஆரம்ப நிலையிலேயே உள்ளது.

புதிய சட்டசபை கட்டுவதற்கான கோப்பு கவர்னர் தமிழிசையிடம் தேக்கமடைந்துள்ளததால் காலதாமதம் ஆவதாக சபாநாயகர் செல்வம் குற்றம் சாட்டினார்.

அதற்கு, தனது மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் பதிலளித்த கவர்னர் தமிழிசை, ரூ.600 கோடியில் ஆடம்பரமாக கட்ட வேண்டுமா என கேள்வி எழுப்பி இருந்தார்.

இது தொடர்பாக சபாநாயகர் செல்வம் கூறும்போது, புதிய சட்டசபை கட்டடத்திற்கு அனுமதி கேட்டு 50க்கும் மேற்பட்ட முறை கவர்னரை சந்தித்துவிட்டேன். ஓரிரு தினங்களில் முடித்து விடுவதாக கவர்னர் சொல்லி ஐந்து மாதம் முடிந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் காலம் பார்ப்பேன்.

இல்லையெனில் சட்டசபை கோப்பு காலதாமதம் சம்பந்தமாக மத்திய உள்துறையிடம் நேரடியாக புகார் தெரிவிப்பேன். கவர்னர் இந்த கோப்பினை விரைந்து முடிவெடுத்து மத்திய உள்துறையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய சட்டசபை கட்டும் விவகாரத்தில் கவர்னர்-சபாநாயகர் இடையே மோதல் வெடித்துள்ளதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us