/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரவிந்தர் கல்லூரியில் மாணவர் பிரிவு துவக்கம்
/
அரவிந்தர் கல்லூரியில் மாணவர் பிரிவு துவக்கம்
ADDED : ஜூலை 24, 2011 12:14 AM
புதுச்சேரி : சேதராப்பட்டு அரவிந்தர் பொறியியல் கல்லூரி கம்ப்யூட்டர் துறையில் சொசைட்டி ஆப் இந்தியாவின் புதுச்சேரி கிளை மாணவர் பிரிவு துவக்கப்பட்டது.
கம்ப்யூட்டர் துறை தலைவர் கணேசன் வரவேற்றார். கம்ப்யூட்டர் துறை மாணவர் பிரிவை, சொசைட்டியின் புதுச்சேரி கிளைத் தலைவர் மீனாட்சிகுமார் துவக்கி வைத்தார். மதுரை அண்ணா பல்கலைகழக திட்ட வளர்ச்சி மற்றும் சர்வதேச செயல்பாடுகள் இயக்குனர் டாக்டர் மனோகரன் சிறப்புரையாற்றினார். தகவல் தொழில்நுட்பத் தலைவர் ராம் டண்டன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கல்லூரி தலைவர் நித்தியானந்தன், செயலாளர் ராஜசேகரன், நிர்வாக இயக்குனர் முருகதாஸ், நிர்வாக அதிகாரி சுரேஷ், டீன் புரு÷ஷாத்தமராஜ், முதல்வர் கண்ணன், துணை முதல்வர் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.