நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : உடல் நிலை சரியில்லாத தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.குமரகுருபள்ளம் அந்தோணியார் கோவில் தெருவில் வசித்தவர் ராமன், 35; கூலித் தொழிலாளி.
இவர் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.நோய் இருக்கும் போதே தினந்தோறும் குடித்து வந்ததால் உடல் நிலை மோசமானது. இதனால் மனமுடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.பெரியகடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.