sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நவ.1ம் தேதி சுதந்திர தினமாக அறிவிக்கக்கோரி உண்ணாவிரதம்

/

நவ.1ம் தேதி சுதந்திர தினமாக அறிவிக்கக்கோரி உண்ணாவிரதம்

நவ.1ம் தேதி சுதந்திர தினமாக அறிவிக்கக்கோரி உண்ணாவிரதம்

நவ.1ம் தேதி சுதந்திர தினமாக அறிவிக்கக்கோரி உண்ணாவிரதம்


ADDED : ஆக 03, 2011 01:32 AM

Google News

ADDED : ஆக 03, 2011 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : நவம்பர் 1ம் தேதியை புதுச்சேரி சுதந்திர தினமாக அறிவிக்க வலியுறுத்தி பூர்வீக மக்கள் நல பாதுகாப்பு இயக்கத்தினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று துவக்கினர்.

சுதேசி மில் அருகே நேற்று காலை போராட்டம் துவங்கியது. தியாகி சாலிவாகனன் வரவேற்றார். தியாகி அருள்ராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க் கள் வேணுகோபால், இளங்கோ, தியாகிகள் வெங்கடபதி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

புதுச்சேரியில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் குடும்பத்தினருக்கு பிரெஞ்சு அரசு தந்ததுபோல் பூர்வீக மக்கள் குடும்ப அடையாள அட்டை வழங்க வேண்டும். உண்மையான தேசபக்தர்களுக்கு தியாகி பென்ஷன் வழங்க வேண்டும். புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சி முடிந்து இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்ட நவம்பர் 1ம் தேதியை புதுச்சேரி அரசு சுதந்திர தினமாக அறிவித்து விடுமுறை அளிக்க வேண்டும். ஊழல்களைக் கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இயக்க செயலர் சிவராஜ் நன்றி கூறினார்.








      Dinamalar
      Follow us