/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்
/
பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்
பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்
பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 18, 2011 04:34 AM
புதுச்சேரி : லாஸ்பேட்டை தொகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என பா.ஜ.,கோரிக்கை வைத்துள்ளது.
லாஸ்பேட்டை பா.ஜ.,நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தொகுதி கட்சி அலுவலகத்தில் நடந்தது.
தொகுதி தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் சாமிநாதன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் புவியரசு, மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுரிசங்கர், மாநில விவசாய அணி செயலாளர் பாஸ்கர், தொகுதி பொது செயலாளர் ஏழுமலை, தொகுதி செயலாளர்கள் துரை, கிருஷ்ணன், இளைஞர் அணி தலைவர் சத்யா, செயலாளர் ரவி, துணை தலைவர்கள் கணேஷ், பாலா, நிர்வாகி ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் லாஸ்பேட்டை தொகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளைப் போர்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். அசோக் நகர் பூங்காக்களை சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும். லாஸ்பேட்டை உழவர்கரை நகராட்சி வணிக வளாகத்தில் மீன், காய்கறி அங்காடி கடைகளைத் அரசு திறக்க முன்வர வேண்டும். லாஸ்பேட்டை பகுதியில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியைத் துரிதப்பட வேண்டும். கட்சி பாகுபாடு இன்றி இலவச திட்டங்களை மக்களுக்கு வழங்க வேண்டும். இல்லையெனில் பா.ஜ.,போராட்டம் நடத்தும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.