/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தேர்வு
/
முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஆக 22, 2011 10:51 PM
புதுச்சேரி : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதுச்சேரி மாவட்ட கூட்டம் உருளையன்பேட்டை சமுதாய நலக் கூடத்தில் நடந்தது.
புதுச்சேரி மாநில அமைப்புக் குழு உறுப்பினர் ரஹமத்துல்லாகான் தலைமை தாங்கினார். கீழக்கரை ஹாஜி ஜவாஹீர், பி ஹம்சா முன்னிலை வகித்தனர். தமிழ் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக ஹைருல்லாஹ், செயலாளராக ஜிகினி முஹம்மது அலி, பொருளாள ராக ஷேக் அப்துல்லாஹ், துணைத் தலைவராக ஷாஜகான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை மேலாளர் இப்ராஹீம் மக்கீ, அப்துல் கப்பார், ஹாஜி அபூசாலிஹ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.