/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கட்டபொம்மன் இளைஞர் சங்கத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ்
/
கட்டபொம்மன் இளைஞர் சங்கத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ்
கட்டபொம்மன் இளைஞர் சங்கத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ்
கட்டபொம்மன் இளைஞர் சங்கத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ்
ADDED : ஆக 25, 2011 01:59 AM
புதுச்சேரி : அரியாங்குப்பம் கட்டபொம்மன் இளைஞர் நலச் சங்கத்தில் மத நல்லிணக்க விழா, கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
சங்கத் தலைவர் பக்தவச்சலம் வரவேற்றார். நேரு யுவக்கேந்திரா இளைஞர் ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் நோக்க உரையாற்றினார். அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து கமிஷனர் ரவீந்திரன், வட்டார வளர்ச்சி அதிகாரி மாலதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
புரு÷ஷாத்தமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு, சபாநாயகர் சபாபதி சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். துணைத் தலைவர் ஜான் வின்சென்ட் நன்றி கூறினார்.