sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி கையாள்வதை தடை செய்ய தீர்மானம்

/

காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி கையாள்வதை தடை செய்ய தீர்மானம்

காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி கையாள்வதை தடை செய்ய தீர்மானம்

காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி கையாள்வதை தடை செய்ய தீர்மானம்


ADDED : அக் 11, 2011 02:34 AM

Google News

ADDED : அக் 11, 2011 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களில் தடை செய்தது போல, காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி கையாள்வதை தடை செய்ய வேண்டும் என மா.கம்யூ., மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காரைக்கால் மா.கம்யூ., கட்சியின் 20வது மாநாடு நாவலன் நினைவரங்கத்தில் நடந்தது. கூட்டத்திற்கு புதுச்சேரி மாவட்ட குழு உறுப்பினர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். மாநாட்டு கொடியை தாண்டவசாமி ஏற்றினார். ராமர் வரவேற்றார். பிரதேச குழு உறுப்பினர் கலிவரதன் துவக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் வின்சென்ட் அறிக்கை வாசித்தார். மாநாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த சென்னை ஐகோர்ட் ஆணை பிறப்பித்தும், புதுச்சேரி அரசு அதற்கான நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. காரைக்காலில் துவக்கப்பட்ட கப்பல் துறைமுகத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.



சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலக்கரி கையாள்வதை, சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களில் தடை செய்தது போல் காரைக்காலிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்கால் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும், காரைக்கால் - நாகூர் அகல ரயில்பாதை திட்டத்தை முடித்து உடனடியாக ரயில் போக்குவரத்தை துவக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, ஊக்கத்தொகையாக ஹெக்டேருக்கு ரூ. 7000 வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.










      Dinamalar
      Follow us