/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலைகளை சீரமைக்க வேண்டும் : இந்திய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்
/
சாலைகளை சீரமைக்க வேண்டும் : இந்திய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்
சாலைகளை சீரமைக்க வேண்டும் : இந்திய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்
சாலைகளை சீரமைக்க வேண்டும் : இந்திய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்
ADDED : அக் 15, 2011 02:33 AM
புதுச்சேரி : அரியாங்குப்பம் சண்முகா நகரில் சாலைகளைச் சரி செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக கட்சியின் அரியாங்குப்பம் கிளைக்கூட்டம் அன்னை இந்திரா நகர் பாரி அரங்கில் நடந்தது. மாநில செயலாளர் சத்தியானந்தம் தலைமை தாங்கினார். இளைஞரணி தலைவர் வீரசேகரன், மீனவரணி தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட சண்முகா நகரில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. மழைக் காலங்களில் இப்பகுதி வெள்ளக்காடாக மாறி விடுகிறது. மேலும், பல்வேறு சுகாதாரகேடுகளும் விளைகின்றன. கழிவு நீர் வாய்க்கால் வசதிகளும் இப்பகுதியில் இல்லாத நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் போர்க்கால அடிப்படையில் சாலைகள், கழிவு நீர் வாய்க்கால் வசதிகளை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.