/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து
/
புதுச்சேரி அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து
ADDED : ஏப் 09, 2025 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்ட 4 அதிகாரிகளுக்கு பதவி மூப்பு அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இந்திய நிர்வாக சேவை விதிகளின்படி, கடந்த 2021 முதல் 2024 வரையிலான அதிகாரிகள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டது. அவர்களில், யூனியன் பிரதேசங்களில் இந்திய நிர்வாக சேவை பிரிவுகளில் பணி புரிய தேர்வாகியுள்ளனர்.
அதில் புதுச்சேரியில், தொழில் துறை இயக்குநர் ருத்ரகவுடு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை இயக்குநர் ஒய்.என்.ரெட்டி, கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி மற்றும் வணிகவரித்துறை ஆணையர் முகமது மன்சூர் ஆகியோர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றனர்.