/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி மக்கள் தமிழ் சங்கம் நகராட்சி ஆணையருக்கு மனு
/
புதுச்சேரி மக்கள் தமிழ் சங்கம் நகராட்சி ஆணையருக்கு மனு
புதுச்சேரி மக்கள் தமிழ் சங்கம் நகராட்சி ஆணையருக்கு மனு
புதுச்சேரி மக்கள் தமிழ் சங்கம் நகராட்சி ஆணையருக்கு மனு
ADDED : அக் 16, 2025 11:30 PM

புதுச்சேரி: சவ ஊர்வலத்தின் போது மாலைகள், பூக்களை சாலையில் வீசுவது தொடர்பாக புதுச்சேரி மக்கள் தமிழ் சங்கம் தலைவர் சரவணன், பொதுசெயலாளர் ஜெய முருகேசன், செயலாளர்கள் புண்ணிய மூர்த்தி, ரவிச்சந்திரன் ஆகியோர் புதுச்சேரி நகராட்சி ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில், புதுச்சேரியில் சவ ஊர்வலங்கள் செல்லும்போது, மாலைகளை சலையில் வீசுவது, பூக்களை பிய்த்து வழியெல்லம் துாவுவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மழைக்காலங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலையில் கிடக்கும் பூக்கள் மீது ஏறி விபத்து ஏற்படுகிறது. மேலும் துப்புரவு தொழிலாளர்கள் சாலைகளை சுத்தம் செய்யும்போது, சிரமத்துக்குள்ளாகின்றனர். ஆகையால் சவ ஊர்வலத்தின் போது சாலையில் மாலைகள், மற்றும் பூக்களை போட்டு சாலையை குப்பையாக்கின்றுவர்களுக்கு இறந்தவருக்கான சான்றிதழை அளிக்கக்கூடாது.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.