/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உலக சாம்பியன் கயிறு இழுக்கும் போட்டி இந்திய அணிக்கு புதுச்சேரி வீரர் தேர்வு

ADDED : செப் 04, 2025 12:48 AM

நெட்டப்பாக்கம் : லண்டனில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப் கயிறு இழுக்கும் போட்டிக்கு இந்திய அணி சார்பில் புதுச்சேரி வீரர் தேர்வாகியுள்ளார்.
லண்டனில் இன்று 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை கயிறு இழுக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் இந்திய அணியில் புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதி மடுகரை ராம்ஜி நகரைச் சேர்ந்த வெங்கடேசன் 23, தகுதி பெற்றுள்ளார். இதையொட்டி அவருக்கு போக்குவரத்து பயணச் செலவுக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை துணை சபாநாயகர் ராஜவேல, அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.
இவர் தேசிய அளவில் 2 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த ஜனவரி மாதம் மகாராஷ்டிராவில் நடந்த போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.