/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய டென்னிக்காய்ட் போட்டி புதுச்சேரி வீரர்கள் பங்கேற்பு
/
தேசிய டென்னிக்காய்ட் போட்டி புதுச்சேரி வீரர்கள் பங்கேற்பு
தேசிய டென்னிக்காய்ட் போட்டி புதுச்சேரி வீரர்கள் பங்கேற்பு
தேசிய டென்னிக்காய்ட் போட்டி புதுச்சேரி வீரர்கள் பங்கேற்பு
ADDED : டிச 25, 2025 05:28 AM

பாகூர்: தேசிய சப் ஜூனியர் டென்னிக்காய்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புதுச்சேரி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
அகில இந்திய டென்னிக்காய்ட் பெடரேஷன் ஆதரவுடன், கேரளா மாநில டென்னிக்காய்ட் சங்கம் சார்பில், 37வது தேசிய அளவிலான சப் ஜூனியர் டென்னிக்காய்ட் சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த 22ம் தேதி துவங்கி நாளை 26ம் தேதி வரை, கேரளா மாநிலம் காசர்கோட்டில் நடக்கிறது.
இப்போட்டியில் புதுச்சேரி மாநிலம் சார்பில் சிறுவர் அணியில் மனோஜ், தனுஷ், அரிஷ், ரக்ஷன்குமார், ராகேஷ் ஆகியோரும், சிறுமி அணியில் காவியா, பவிஷிகா. திவ்யஸ்ரீ, ஸ்வாதி, ஹேமஸ்ரீ, நீரோஷா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அவர்களுடன் பயிற்சியாளராக தண்டபாணி, அருள்பிரகாசம், மேலாளராக வரதராசு, தேன்மொழி, சங்க செயலாளர் தினேஷ்குமார் உடன் சென்றுள்ளனர்.
முன்னதாக, கேரளா புறப்பட்ட வீரர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி பாகூரில் நடந்தது. இதில், மாநில அமெச்சூர் டென்னிக்காய்ட் சங்க தலைவர் ராமு, வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

