sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஞானம் இல்லாமல் பகவானை அறியமுடியாது ஓய்வு பெற்ற நீதிபதி ராம பத்ர தாதம் உபன்யாசம்

/

 ஞானம் இல்லாமல் பகவானை அறியமுடியாது ஓய்வு பெற்ற நீதிபதி ராம பத்ர தாதம் உபன்யாசம்

 ஞானம் இல்லாமல் பகவானை அறியமுடியாது ஓய்வு பெற்ற நீதிபதி ராம பத்ர தாதம் உபன்யாசம்

 ஞானம் இல்லாமல் பகவானை அறியமுடியாது ஓய்வு பெற்ற நீதிபதி ராம பத்ர தாதம் உபன்யாசம்


ADDED : டிச 25, 2025 05:25 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இறைவனை சொல்லில் அடைக்கவும் முடியாது. உள்ளத்தில் கொள்ளத் தான் முடியும் என ஓய்வு பெற்ற நீதிபதி ராம பத்ர தாதம் உபன்யாசம் செய்தார்.

முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் மார்கழி திருப்பாவை மகோற்சவ உபன்யாசம் கடந்த 16ம் தேதி துவங்கி நடந்து வருகின்றது. நேற்றைய ஒன்பதாம் நாளில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் நிகழ்த்திய உபன்யாசம்:

திருப்பாவையின் 9 வது பாசுரத்தில் ஒன்பது நவரத்னங்களாக நமக்கும் பகவானுக்கும் உள்ள 9 வித உறவுகள் உள்ளுரையாகச் சொல்லப்பட்டுள்ளது. ஜீவாத்காக்களாகிய நமக்கும் பகவானுக்கும் உள்ள ஒன்பதுவிதமான உறவுகளை 9ம் பாசுரத்தின் உள்ளுறைப் பொருளாக அனுபவிக்கலாம். அந்த உறவுமுறைகள்: தந்தை -மகன் உறவு, காப்பவன் - காக்கப்படுபவன் கணவன் மனைவி, அனுபவிப்பவன் - அனுபவிக்கப்படுபவன், அறிபவன் — அறியப்படுபவன், ஆண்டான் - அடிமை, ஆண்டான் — அடிமை, தாங்குபவன் — தாங்கப்படுபவன்,உடல்--உயிர் என்ற ஒன்பது விதமான முறைகள்.

பகவான் கண்ணன் பகவத் கீதையில் உபதேசித்துள்ள ஒரு கருத்தை இந்தப் பாசுரம் உணர்த்தும் உள்ளுறைப் பொருளை உணர வைக்கும். உலகத்தில் சம்சாரிகள் எதில் விழித்துக் கொண்டிருக்கிறார்களோ, அதில் ஞானிகள் தூங்குகிறார்கள். ஞானிகள் எதில் விழித்துக் கொண்டிருக்கிறார்களோ, அதில் சம்சாரிகள் தூங்குகிறார்கள் என்பது கீதையில் பகவான் சொன்ன வாக்கு. பகவத் கீதையில் சொன்னதை திருப்பாவையில் “கண் வளரும்” எனும் பதத்தால் கோதாப் பிராட்டி சொல்கிறாள்.

மஹா ஞானிகள் பகவதனுபவத்தில் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். லோக விஷயங்களில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நித்ய சம்சாரிகள் நிலை வேறாக இருக்கிறது. எனவே, கண் வளர்தல் என்பதில் சகலத்தையும் மறந்து பகவானைப் பற்றி நிற்கும் வைராக்யத்தைக் காட்டுகிறாள். எனவே தான், ஞானம், அனுஷ்ட்டானம், வைராக்யம் மூன்றும் சித்திக்க வேண்டும் என பகவதி கீதையான திருப்பாவையில் கூறப்பட்டுள்ளது.

உபன்யாசம் நேரம் மார்கழி மாகோற்சவ உபன்யாசம் அடுத்த மாதம் 14ம் தேதி வரை தொடர்ந்து நடக்கின்றது. தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை உபன்யாசத்தை கேட்கலாம்.








      Dinamalar
      Follow us