/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உலக கயிறு இழுக்கும் போட்டிக்கு புதுச்சேரி வீரர்கள் இங்கிலாந்து பயணம்
/
உலக கயிறு இழுக்கும் போட்டிக்கு புதுச்சேரி வீரர்கள் இங்கிலாந்து பயணம்
உலக கயிறு இழுக்கும் போட்டிக்கு புதுச்சேரி வீரர்கள் இங்கிலாந்து பயணம்
உலக கயிறு இழுக்கும் போட்டிக்கு புதுச்சேரி வீரர்கள் இங்கிலாந்து பயணம்
ADDED : ஆக 22, 2025 03:44 AM

புதுச்சேரி: இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக அளவிலான கயிறு இழுக்கும் போட்டிக்கு புதுச்சேரி வீரர்களை எதிர்க்கட்சி தலைவர் வழியனுப்பி வைத்தார்.
இங்கிலாந்து நாட்டில் வரும் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை உலக அளவிலான கயிறு இழுக்கும் போட்டி நடைபெறுகிறது.
ஆடவர் மற்றும் மகளிர் இரு பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன.
இப்போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய அ ணி தேர்வு நாகாலாந்து, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களில் நடந்தது. இப்போட்டிகளில், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த வெங்கடேசன், ஜெயக்குமாரி தேர்வாகி இந்திய அணியில் இடம் பெற்று, புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்கள் வரும் 3ம் தேதி டில்லியில் இருந்து இந்திய அணியுடன் லண்டன் செல்ல உள்ளனர்.
உலக கயிறு இழுக்கும் போட்டிக்கு தேர்வாகியுள்ள புதுச்சேரி வீரர்கள் வெங்கடேசன், ஜெயக்குமார் ஆகியோரை, புதுச்சேரி மாநில கயிறு இழுக்கும் சங்க தலைவரான எதிர்க்கட்சி தலைவர் சிவா வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
அப்போது, செந்தல்குமார் எம்.எல்.ஏ., தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், வடிவேல், மாணவரணி அமைப்பாளர் மணிமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

