ADDED : மார் 16, 2024 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி கவிஞர் செந்தில் குமரனுக்கு, 'சரித்திர தேர்ச்சி கொள்' நுாலுக்காக விருது வழங்கப்பட்டது.
சென்னை, வாணுவம்பேட்டை, திருவள்ளுவர் இலக்கிய மன்ற, 49வது ஆண்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில், கவி மாமணி செல்லப்பன் நல்லம்மை அறக்கட்டளையின் தகைசால் விருது, 'சரித்திர தேர்ச்சி கொள்' எனும் மரபுக் கவிதை நுாலுக்கு வழங்கப்பட்டது.
தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை அருள், இந்த விருதை நுாலாசிரியர் புதுச்சேரி கவிஞர் செந்தில் குமரனுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வில் மன்ற செயலாளர் குருநாதன், நிர்வாகி ஜனார்த்தனன் ஆகியோர் பங்கேற்றனர்.

