/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி நள்ளிரவில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் போலீசார் தடியடியால் பரபரப்பு

ADDED : ஜன 01, 2025 05:23 AM

புதுச்சேரி:   புதுச்சேரியில் கடற்கரை சாலையில் புத்தாண்டு உற்சாக கொண்டாடப்பட்டது.
புத்தாண்டு கொண்டாட, புதுச்சேரி கடற்கரை சாலையில் சுற்றுலா துறை சார்பில், சிறப்பு ஏற்பாடுக் செய்யப்பட்டிருந்தது. காந்தி சிலை அருகே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்க் குவிந்தனர்.
நேற்று நள்ளிரவு 12:00 மணி ஆனதும் கடற்கரையில் கூடியிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். 'ஹாப்பி நியூ இயர்' என, உரத்த குரலில் புத்தாண்டை வரவேற்று உற்சாகமாக கொண்டாடினர்.
இதேபோல், புதுச்சேரி மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஓட்டல்கள், தங்கு விடுதிகளிலும் புத்தாண்டை உற்சாக பொதுமக்கள் வரவேற்றனர். வீதிகளில் இளைஞர்கள் நடனமாடியும், கேக் மற்றும் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இதனிடையே கடற்கரை சாலையில் நள்ளிரவு 12:30 மணிக்கு மேல் கூடியிருந்த கூட்டத்தை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர்.
முன்னதாக குடிபோதையில் கடற்கரைக்கு வந்த வாலிபர்களையும் போலீசார் விரட்டினர். இதனால், பரபரப்பு நிலவியது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நகர பகுதி முழுதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் தீவிரப்படுத்தி இருந்தனர்.
பொதுமக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்தும் வகையில் புதுச்சேரி நகருக்குள் நுழையும் அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் தடுப்பு கட்டைகள் அமைத்து தீவிர சோதனைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.