/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அரசின் உத்தரவை மதிக்காத புதுச்சேரி போலீஸ் அதிகாரிகள்
/
மத்திய அரசின் உத்தரவை மதிக்காத புதுச்சேரி போலீஸ் அதிகாரிகள்
மத்திய அரசின் உத்தரவை மதிக்காத புதுச்சேரி போலீஸ் அதிகாரிகள்
மத்திய அரசின் உத்தரவை மதிக்காத புதுச்சேரி போலீஸ் அதிகாரிகள்
ADDED : மே 17, 2025 11:27 PM

சுற்றுச் சூழலை பாதுகாத்திடும் பொருட்டு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், வாகனங்களின் ஆயுட்காலம் 15 ஆண்டாக நிர்ணயித்தது. குறிப்பாக அரசு துறைகளில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை கண்டம் செய்ய அறிவுருத்தியது.
இந்த உத்தரவை பின்பற்றியே புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் இயக்கப்பட்டு வந்த காலாவதி பஸ்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் கண்டம் செய்யப்பட்டது.
ஆனால், போலீஸ் துறையில் கடந்த 2005ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தியன் ரிசர்வ் பாட்டாலியனில் பஸ், வேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இயக்கப்பட்டு வருகிறது. அதாவது, வாகனங்களின் ஆயுட்காலம் முடிந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகியும், எவ்வித தகுதிச் சான்றும் இல்லாமலேயே தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
காலாவதியான இந்த கனரக வாகனங்களில் தான், பாதுகாப்பு பணிக்காக போலீசார் பல்வேறு ஊர்களுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். இந்த வாகனங்களில் ஒவ்வொரு முறையும் போலீசார், தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணிப்பது வேதனையாக உள்ளது.
மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் உத்தரவின்படி, இந்தியன் ரிசர்வ் பெட்டாலியன் பிரிவில் உள்ள காலாவதியான கனரக வாகனங்களை கண்டம் செய்யாமல், அதிலேயே ஆபத்தான நிலையில் போலீசாரை பயணிக்க வைப்பது, சொகுசு வாகனங்களில் உலா வரும் அதிகாரிகளின் அலட்சிய போக்கையை காட்டுகிறது. விபரீதம் நடப்பதற்கு முன்பாக புதுச்சேரி போலீஸ் துறை விழித்துக் கொள்ளுமா?