தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியிலும் போராட்டம்: உளவு துறை உஷார்

புதுச்சேரியிலும் போராட்டம்: உளவு துறை உஷார்

புதுச்சேரியிலும் போராட்டம்: உளவு துறை உஷார்


UPDATED : அக் 12, 2026 10:14 PM

ADDED : அக் 12, 2026 09:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 10:14 PM ADDED : அக் 12, 2026 09:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் மக்கள் கூடும் இடங்களில் போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதால், உளது துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் எதிர்கட்சிகள் சார்பில், வாக்காளர் சிறப்பு திருத்தப்பணியில், லட்சகணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதை கண்டித்து தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என கூறி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், போராட்டம் நடக்க இருந்த நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மற்றும் நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். மேலும், மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னை பெசன்ட் நகரில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

உளவுத்துறையினர் உஷார்:

இந்நிலையில், புதுச்சேரியிலும், தொடர் போராட்டங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து, புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடல், மைதானங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில், உளவுத் துறையினர் உஷார் படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us