தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காங்., எம்.பி., மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ., கண்டன பேரணி

காங்., எம்.பி., மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ., கண்டன பேரணி

காங்., எம்.பி., மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ., கண்டன பேரணி


UPDATED : அக் 12, 2026 10:33 PM

ADDED : அக் 12, 2026 09:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 10:33 PM ADDED : அக் 12, 2026 09:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., மகளிர் அணி சார்பில் காங்., எம்.பி., மீதான புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டனப் பேரணி நேற்று நடந்தது.

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த காங்., எம்.பி., கல்லுாரி மாணவிகளிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ., மகளிர் அணி சார்பில் கண்டனப் பேரணி நேற்று நடந்தது.

பழைய பஸ் நிலையம் அருகே துவங்கிய பேரணிக்கு மாநில மகளிர் அணிப் பொறுப்பாளர் ஜெயந்தி தலைமை தாங்கினார். ஜான்குமார் எம்.எல்.ஏ., பேரணியை துவக்கி வைத்தார். இதில், மாநில நிர்வாகிகள் பிரியா, விஜயலட்சுமி, மஞ்சு, கீதா, அனிதா, அனுராதா, சுஜாதா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

பேரணியில் கல்லுாரி மாணவிகளிடம் முறைகேடாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட எம்.பி., மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தொடர்புடைய எம்.பி., பாதுகாக்கும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பேரணியில் ஈடுபட்ட மகளிர் அணியினர், ராஜா தியேட்டர் அருகே சென்றபோது திடீரென காங்., அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை பெரியக்கடை போலீசார் பேரிகார்டு போட்டு தடுத்து நிறுத்தியதால், போலீசாருக்கும், மகளிர் அணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us