/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கனமழை அறிவிப்பை கேட்டாலே அலறும் புதுச்சேரி வாசிகள் ஆண்டுதோறும் தொடரும் வெள்ள பாதிப்பு
/
கனமழை அறிவிப்பை கேட்டாலே அலறும் புதுச்சேரி வாசிகள் ஆண்டுதோறும் தொடரும் வெள்ள பாதிப்பு
கனமழை அறிவிப்பை கேட்டாலே அலறும் புதுச்சேரி வாசிகள் ஆண்டுதோறும் தொடரும் வெள்ள பாதிப்பு
கனமழை அறிவிப்பை கேட்டாலே அலறும் புதுச்சேரி வாசிகள் ஆண்டுதோறும் தொடரும் வெள்ள பாதிப்பு
ADDED : அக் 25, 2025 11:09 PM

கனமழை எச்சரிக்கை கேட்டாலே புதுச்சேரி நகரப் பகுதி மக்கள் அச்சம் அடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை புதுச்சேரியில் அதிக அளவில் பெய்து வருகிறது. இதனால் நகரப் பகுதி வெள்ளக்காடாகி வீட்டில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேறி, வேறு புகலிடம் தேடி செல்லும் நிலை தொடர் கதையாக உள்ளது.
கடந்தாண்டு புதுச்சேரி நகரம் மட்டுமல்ல கிராமங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. வீட்டில் உள்ளவர்களை துணை ராணுவத்தினர் மற்றும் வருவாய் துறையினர் படகு வைத்து மீட்டனர்.
உதாரணத்திற்க, முக்கிய நகர பகுதியாக விளங்கும் ரெயின்போ நகர், வெங்கட்டா நகரில் தரை தளம் முழுவதும் வெள்ளம் புகுந்தது. வீட்டிலிருந்தவர்கள் மாற்று இடங்களுக்கு படகில் வெளியேறி விட, வீடுகளில் இருந்த பொருட்கள் 'டிவி' தொடங்கி கார் வரை வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்தன. இதனால் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை பொருள் சேதம் ஏற்பட்டு, மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்தாண்டும் வடகிழக்கு பருவ மழை துவங்கி, புயல் எச்சரிக்கையும் வந்து விட்டது. ஆனால் இதுவரை வெள்ளம் சூழும் பகுதிகளில் நிரந்தர தீர்வுகளை ஏற்படுத்தாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மெத்தனமாக இருப்பது பொது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளம் சூழாமல் இருக்க பல கோடி ரூபாய் செலவு செய்து இந்திரா சதுக்கத்தில் அமைக்கப்பட்ட அனைத்து திட்டங்களுமே, கடந்த 22ம் தேதி இரவு பெய்த கனமழையில் பொய்த்து போனது. வழக்கம்போல் வெள்ளம் சூழ்ந்து நிற்க, அதை கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்து நிற்கும் காட்சியே அதற்கு உதாரணமானது.
சின்னஞ்சிறு நகரமான புதுச்சேரியில், பிரெஞ்சு ஆட்சியர் காலத்தில் அமைக்கப்பட்ட பெரிய பிரதான வாய்க்கால்களே மழைநீர் கடலுக்கு செல்லவதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. இதில் சிறிய வாய்க்கால்களில் இருந்து மழை நீரை பெரிய வாய்க்கால்களுக்கு இழுத்து அனுப்புவதற்காக பல இடங்களில் நிரந்தரமாக பல கோடி ரூபாய் செலவில் ஜெனரேட்டர் வசதியுடன் மோட்டார் இன்ஜின்கள் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
ஆண்டுதோறும் பருவமழை பெய்யும் என தெரிந்தும் மாற்று ஏற்பாடுகளை உருவாக்காமல் பொதுப்பணி துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது யாருக்குமே புரியாமல் உள்ளது. இதில், வெள்ளம் சூழும் பகுதிகளில் நிரந்தரமாக 12 எச்.பி., திறன் கொண்ட மோட்டார் இன்ஜின்கள் மட்டும் தயார் நிலையில் இருக்கிறது. ஆனால் வெள்ளம் உடனடியாக வடிவதற்கான எந்த திட்டமும் இங்கு இல்லை என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை.
பருவ மழை துவங்கி விட்டதால், கனமழை பெய்தால், எப்படி தங்களையும், தங்களது உடமைகளையும் தற்காத்துக் கொள்வது என்ற அச்சமே புதுச்சேரி மக்களிடம் மேலோங்கி உள்ளது. என்ன செய்யப் போகிறார்கள் அதிகாரிகள்.

