தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீசுக்கு மிரட்டல் புதுச்சேரி ரவுடிகள் கைது

 போலீசுக்கு மிரட்டல் புதுச்சேரி ரவுடிகள் கைது

 போலீசுக்கு மிரட்டல் புதுச்சேரி ரவுடிகள் கைது


ADDED : ஜூலை 01, 2026 12:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 12:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வானுார்: கிளியனுார் அருகே ஆயுதங்களை காட்டி போலீசாருக்கு மிரட்டல் விடுத்த புதுச்சேரி ரவுடிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலை, கிளியனுார் சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் இரவு கிளியனுார் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி வந்த 2 பேரை சோதனை செய்ததில், கத்தி வைத்திருப்பது தெரிந்து. உடன் இருவரும் கத்தியைக் காட்டி போலீசாருக்கு மிரட்டல் விடுத்தனர்.

போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில், புதுச்சேரி முருங்கப்பாக்கம் குப்புசாமி மகன் ராஜேஷ், 34; வில்லியனுார், உறுவையாறு ராமச்சந்திரன் மகன் மணிபாரதி, 23; என்பதும், அவர்கள் மீது புதுச்சேரியில் கொலை வழக்குகள் இருப்பதும், இந்த வழக்கு தொடர்பாக புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராகி விட்டு, செங்கல்பட்டுக்கு ஆயுதங்களுடன் சென்ற ரவுடிகள் என்பதும் தெரியவந்தது.

உடன், இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us