தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பிளாஸ்டிக் பாட்டில்களால் திணறும் புதுச்சேரி கடல்: விழிப்புணர்வுடன் களமிறங்கிய மாசுக்கட்டுப்பாட்டு குழு

பிளாஸ்டிக் பாட்டில்களால் திணறும் புதுச்சேரி கடல்: விழிப்புணர்வுடன் களமிறங்கிய மாசுக்கட்டுப்பாட்டு குழு

பிளாஸ்டிக் பாட்டில்களால் திணறும் புதுச்சேரி கடல்: விழிப்புணர்வுடன் களமிறங்கிய மாசுக்கட்டுப்பாட்டு குழு


UPDATED : நவ 07, 2026 02:56 PM

ADDED : நவ 07, 2026 02:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 02:56 PM ADDED : நவ 07, 2026 02:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அழகிய கடற்கரையும், இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்களும் நிறைந்த புதுச்சேரியில், தற்போது ஒரு சைலண்ட் வில்லன் ஊடுருவியுள்ளது. அது வேறு யாருமல்ல, நாம் அலட்சியமாக வீசி எரியும் பிளாஸ்டிக் பாட்டில்கள்தான்..

பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை முறையாகச் சேகரிக்காமல், திறந்தவெளிகளிலும் வடிகால்களிலும் வீசுவதால் அவை நேராக நீர்நிலைகளையும் கடலையும் சென்றடைந்து கடும் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன.

அதுமட்டுமின்றி, மழைக்காலங்களில் வடிகால்களில் அடைப்பை ஏற்படுத்தி வெள்ளப்பெருக்கிற்கும் வழிவகுக்கின்றன. சமீபத்தில் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டுக் குழுமம் நடத்திய அதிரடி ஆய்வில், கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் வெறும் குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களின் பங்கு மட்டும் 7.5 சதவீதம் இருப்பது அம்பலமாகியுள்ளது.

இந்த சுற்றுச்சூழல் ஆபத்தை வேரோடு கிள்ளியெறிய, புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டுக் குழு ஒரு அசத்தலான முன்னெடுப்பை எடுத்துள்ளது. மறுசுழற்சிக்கு வித்திடும் வகையில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் சுண்ணாம்பாறு படகு இல்ல வளாகம் மற்றும் பாண்டி மெரினா உணவுப் பூங்கா ஆகிய இரு இடங்களிலும், பாட்டில்களைச் சேகரிப்பதற்காகவே பிரத்யேகமாக பாட்டில் வடிவிலான சேகரிப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

சுண்ணாம்பாறு படகு இல்லம்:: இங்கு அமைக்கப்பட்ட புதிய சேகரிப்பு மையத்தை அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் விநாயக மூர்த்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியாளர் காளமேகம் ஆகியோர் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தனர். உதவிப் பொறியாளர் நாகராஜ், இளநிலைப் பொறியாளர் சுரேஷ் மற்றும் படகு குழாம் அலுவலர் பார்த்தசாரதி கலந்து கொண்டனர்.

பாண்டி மெரினா உணவுப் பூங்கா:: இங்கு அமைக்கப்பட்ட மையத்தை புதுச்சேரி நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு மற்றும் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டுக் குழுவின் உறுப்பினர் செயலர் ரமேஷ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்துச் சிறப்பித்தனர். ஏற்பாடுகளைப் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டுக் குழுவின் திட்ட அலுவலர்களான சாந்தலட்சுமி, தினேஷ் மற்றும் ஸ்ரீனிவாசன் ஒருங்கிணைத்திருந்தனர்.

இதேபோல் புதுச்சேரியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இதுபோன்ற கலக்கலான சேகரிப்பு மையங்களை விரிவுபடுத்த மாசுக்கட்டுப்பாட்டுக் குழுமம் திட்டமிட்டுள்ளது..

மக்களே... உங்கள் கைகளில் தான் புதுச்சேரி துாய்மை

பயன்படுத்திய பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை இனி எக்காரணம் கொண்டும் திறந்தவெளியில் வீசாதீர்கள். புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்தச் சேகரிப்பு மையங்களிலேயே போடுங்கள் என்று புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டுக் குழு பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுமக்களின் இந்த சிறிய ஒத்துழைப்புதான் நமது சுற்றுலாத் தலங்களை மாசு இல்லாமல் பாதுகாக்கப் பெரிதும் உதவும். சுற்றுச்சூழலைக் காப்போம்; புதுச்சேரியைப் பசுமையாக்குவோம்..

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us