தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி மாநில மொத்த வாக்காளர்கள் 9.56 லட்சம்: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி மாநில மொத்த வாக்காளர்கள் 9.56 லட்சம்: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி மாநில மொத்த வாக்காளர்கள் 9.56 லட்சம்: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு


ADDED : நவ 12, 2026 08:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2026 08:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சிறப்பு சுருக்க திருத்தம் முடிந்து, புதுச்சேரி மாநில வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில், 9.56 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ரவிபிரகாஷ் செய்திக்குறிப்பு:

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல், 30 தொகுதிகளுக்கும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் பிரதிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு கலெக்டர்கள் வழங்கினர். மேலும், தேர்தல் துறையின் https://ceopuducherry.py.gov.in/ என்ற தளத்திலும் இது வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது விவரங்களைச் சரிபார்க்க சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களுக்கும் சென்று பார்வையிடலாம்.

வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 9,56,997 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த பிப்., 14ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 9,44,211 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். தற்போதைய பட்டலில் 12,786 வாக்காளர்கள் அதாவது 1.35 சதவீதம் அதிகரித்துள்ளனர். இதில் 4,49,554 ஆண்கள், 5,07,297 பெண்கள், 146 மூன்றாம் பாலினத்தவர் அடங்குவர்.

10: சிறப்பு சுருக்க திருத்தத்தில் 10,780 ஆண் வாக்காளர்கள், 12,396 பெண் வாக்காளர்கள், 4 மூன்றாம் பாலினத்தவர் என 23,180 பேர் சேர்க்கப்பட்டனர். அதே வேளையில் 4,786 ஆண் வாக்காளர்கள், 5,607 பெண் வாக்காளர்கள், 1 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 10,394 பேர் நீக்கப்பட்டனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க அல்லது திருத்தம் செய்ய கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் அளிப்பதற்கான காலம் வரும் 12ம் தேதி முதல் 11ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1, 2027 அன்று 18 வயதை அடைந்த அல்லது அடையவுள்ள தகுதியான இளம் வாக்காளர்கள் அனைவரும் தங்கள் பெயர்களைச் சேர்த்துக்கொள்ளலாம். 01.04.2027, 01.07.2027 மற்றும் 01.10.2027 ஆகிய அடுத்தடுத்த தகுதி பெறும் நாட்களில் 18 வயதை அடையவுள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை https://voters.eci.gov.in என்ற வாக்காளர் சேவை இணையதளம் அல்லது ECINET செயலி வாயிலாகவும் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

இறுதிப் பட்டியல் வெளியீடு

வாக்காளர் பதிவு அதிகாரியின் உத்தரவால் பாதிக்கப்படுவோர் முதலில் கலெக்டர், முதல் மேல்முறையீட்டு அதிகாரியின் முடிவுக்கு எதிராக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இரண்டாவது மேல்முறையீடு செய்யலாம்.

இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்தாண்டு ஜனவரி 4ம் தேதி வெளியிடப்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

யாருக்கு எந்த படிவம்:

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம்–6 விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்க படிவம்–6 ஏ விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்கான அல்லது வாக்காளர் பட்டியலிலிருந்து பெயரை நீக்குவதற்கு படிவம்–7 பயன்படுத்தலாம். வசிப்பிடத்தை மாற்றுதல், பதிவுகளில் உள்ள விவரங்களைத் திருத்துதல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைக்கு அல்லது மாற்று அட்டை பெறுதல், மாற்றுத்திறனாளி என்ற விவரத்தைக் குறித்தல் ஆகியவற்றுக்கு படிவம்–8 சமர்ப்பிக்க வேண்டும்.

சிறப்பு முகாம்கள்:

பொதுமக்களிடமிருந்து முன்கூட்டியே விண்ணப்பங்களைப் பெற ஏதுவாக, வரும் 21, 22 மற்றும் 28, 29 ஆகிய வார இறுதி நாட்களில் தேர்தல் துறையின் சிறப்பு முகாம் நடக்க உள்ளன. அந்த நாட்களில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் பணியில் இருப்பார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us