/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய கேலோ இந்தியா போட்டி புதுச்சேரி மாணவிக்கு வெண்கலம்
/
தேசிய கேலோ இந்தியா போட்டி புதுச்சேரி மாணவிக்கு வெண்கலம்
தேசிய கேலோ இந்தியா போட்டி புதுச்சேரி மாணவிக்கு வெண்கலம்
தேசிய கேலோ இந்தியா போட்டி புதுச்சேரி மாணவிக்கு வெண்கலம்
ADDED : மே 15, 2025 02:27 AM

புதுச்சேரி: பீகாரில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா விளையாட்டு திருவிழாவில்மல்லர் கம்பம் போட்டியில் புதுச்சேரி மாணவி வெண்கலப் பதக்கம் வென்று, மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
கேலோ இந்தியா இளைஞர் தேசிய விளையாட்டு விழா கடந்த 4ம் தேதி முதல் பீகார் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான இப்போட்டியில் புதுச்சேரி மாநிலம் சார்பில், மல்லர் கம்பம், செட்டக் சக்ரா, மல்யுத்தம், பளு துாக்குதல் மற்றும் கலரி பையட் ஆகிய போட்டிகளில் மொத்தம் 26 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
இதில்,கயா மாவட்டத்தில் நடந்த மல்லர் கம்பம் போட்டியில் புதுச்சேரி மாநிலம் சார்பில் பங்கேற்ற மாணவி ஓவியா 8.50 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இப்போட்டியில், மகாராஷ்டிராவை சேர்ந்த ஆர்யா ஜெயவந்ரோ 8.70 புள்ளிகள் பெற்று தங்க பதக்கமும், தன்ஸ்ரீ சுரேஷ்ஜதாவ் 8.65 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றனர்.
தேசிய போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற மாணவி ஓவியா, கடந்த 12ம் தேதி சட்டசபையில் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதே தேசிய கேலோ இந்தியா போட்டியில் பளு துாக்கும் போட்டியில் புதுச்சேரி மாணவிதர்ஷிணிபிரியா 116 கிலோ எடையை துாக்கி வெள்ளி பதக்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.