/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கராத்தே, சிலம்பம் போட்டி புதுச்சேரி மாணவர்கள் சாதனை
/
கராத்தே, சிலம்பம் போட்டி புதுச்சேரி மாணவர்கள் சாதனை
கராத்தே, சிலம்பம் போட்டி புதுச்சேரி மாணவர்கள் சாதனை
கராத்தே, சிலம்பம் போட்டி புதுச்சேரி மாணவர்கள் சாதனை
ADDED : ஜன 08, 2026 05:19 AM

பாகூர்: மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அப்துல் கலாம் மக்கள் சாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில், பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விழுப்புரத்தில் நேருயுவ கேந்திரா, தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை, எம்.எஸ். சிலம்பம் விளையாட்டு அறக்கட்டளை இணைந்து மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளை நடத்தியது. இதில், 14 வயதிற்குட்பட்டோர் கராத்தே போட்டியில் கன்னியக்கோவில் ஜப்பான் ஷிட்டோ ரியூ கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள்தனேஷ்கர், கவின், அமுதன், திவ்யாபாலாஜி, யோகேஸ்வரன், ஷாக்ஷிபாரதி, ஐஸ்வர்யா, வைஷ்ணவி, மவுலியா, பவித்ரா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.மித்ரன், நிஷ்வந்த், பவித்ரா, ஜனனி, லத்திக்காஸ்ரீ, ஷாக்ஷி ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர்.
சிலம்ப போட்டியில்,14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் சிவனேஷ், கைலேஷ், நித்திஷ்குமார், கவின், கனிஷ், திவனேஷ், சிவனேசன், யோஸ்ரீ, பவித்ரா ஆகியோர் முதலிடத்தையும், சகுன், கனிக் ஷா, பிரசாந்த், அனுஷா ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர்.
மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா கன்னியக்கோவிலில் நடந்தது. அப்துல் கலாம் மக்கள் சாசன பாதுகாப்பு இயக்கம் சாண்டில்யன் தலைமை தாங்கி,சாதனை படைத்த மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இளைஞரணி செயலாளர் அரவிந்தன் வாழ்த்தி பேசினார்.
கராத்தே பயிற்சியாளர் ரவிந்திரன், சிலம்ப பயிற்சியாளர் முனியப்பன் ஆகியோருக்கு சிறந்த ஆசான் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இளங்கோ நன்றி கூறினார்.

