/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அளவில் கராத்தே போட்டி புதுச்சேரி மாணவர்கள் சாதனை
/
மாநில அளவில் கராத்தே போட்டி புதுச்சேரி மாணவர்கள் சாதனை
மாநில அளவில் கராத்தே போட்டி புதுச்சேரி மாணவர்கள் சாதனை
மாநில அளவில் கராத்தே போட்டி புதுச்சேரி மாணவர்கள் சாதனை
ADDED : டிச 18, 2025 05:17 AM

பாகூர்: மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அப்துல் கலாம் மக்கள் சாசன இயக்கம் சார்பில், பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வேலுாரில் ஸ்ரீ நாராயணி பள்ளி மற்றும் ஜப்பான் ஷிட்டோ ரியோ சுகோகாய் இசுகி கராத்தே டு இந்தியா சார்பில், மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில், கன்னியக்கோவில் ஜப்பான் ஷிட்டோ ரியூ கராத்தே பயிற்சி பள்ளி மாணவர் திவ்யாபாலாஜி,தனேஷ்கர், யோகேஸ்வரன், மயிலேஷ், சிவனேஸ்வரன், மாணவிகள் பாவனப்பரியா, குருபிரியா, யோகஸ்ரீ, ஷாக் ஷிபாரதி, ஐஸ்வர்யா ஆகியோர் முதல் இடம் பிடித்தனர். பத்மேஷ், அமுதன், ஸ்ரீசன், ஜகா, லோகேஷ், ஷகுன், வைஷ்ணவி, பிரிதிஷா ஆகியோர் 2ம் இடத்தையும், சுபஷன், ரக்ஷிதாஸ்ரீ, தேவஸ்ரீ, அனுஷ்கா, யஷ்வந்த், நிஷ்வந்த், லிம்சன், மித்திரன், பிரசாந்த், கிேஷார், தருண் ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
அவர்களுக்கு அப்துல் கலாம் மக்கள் சாசன இயக்கம் சார்பில், காட்டுக்குப்பத்தில் பாராட்டு விழா நடந்தது. இயக்க தலைவர் சாண்டில்யன், கராத்தே போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இளைஞரணி செயலாளர் அரவிந்தன், இளங்கோவன் வாழ்த்தி பேசினார். தலைமை பயிற்சியாளர் ரவிந்திரன், பயிற்சியாளர் முனியப்பன் நன்றி கூறினார்.

