/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மரம் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
/
மரம் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
ADDED : டிச 18, 2025 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, குரும்பாப்பட்டு, காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் கோயம்புத்துாரில் இயங்கி வரும் வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்க நிறுவனம் இணைந்து மரம் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சியை நடத்தியது.
சிறப்பு விருந்தினராக அரசு செயலர் சவுத்ரி முகமது யாசின் கலந்துகொண்டார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி, பேராசிரியர் கணேஷ்குமார். விஞ்ஞானிகள் மாயவேல், கார்த்திகேயன், சந்திரசேகரன், பண்ணைக் காடுகள் பிரிவு தொழில்நுட்ப வல்லுனர் சந்திராதரன், மாதவராஜூ ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிலைய விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

