/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செஸ் சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி மாணவர் சாதனை
/
செஸ் சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி மாணவர் சாதனை
ADDED : ஜூன் 13, 2025 03:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தேசிய அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் புதுச்சேரி மாணவர் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஓடிசா செஸ் அசோசியேஷன் சார்பில் 38 வது தேசிய அளவிலான 7 வயதிற்குட்பட்ட செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது.
இப்போட்டிகளில் நாடு முழுதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில், புதுச்சேரி சார்பில் பங்கேற்ற துவேஷ் மிலன், 9 சுற்றுகள் முடிவில் 7.5 புள்ளிகள் பெற்று, தேசிய அளவில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். அவருக்கு, பரிசு தொகையாக, 36 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.