சர்வதேச டேக்வாண்டோ போட்டி புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்பு
சர்வதேச டேக்வாண்டோ போட்டி புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்பு
ADDED : நவ 18, 2026 08:24 PM

புதுச்சேரி: பூனேவில் நடைபெற உள்ள சர்வதேச டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்கும் மாணவர்களை, அரசு கொறடா ஆறுமுகம் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
உலக டேக்வாண்டோ கூட்டமைப்பு மற்றும் ஆசிய டேக்வாண்டோ கூட்டமைப்பான இந்திய டேக்வாண்டோ சம்மேளனம் சார்பில், நாளை மறுநாள் ( 20ம் தேதி) துவங்கி 25ம் தேதி வரை, பூனேவில் டேக்வாண்டோ போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டியில், புதுச்சேரி ஒலிம்பியன் டேக்வாண்டோ சங்கம் சார்பில், தேர்ந்தெடுக்கப்பட்ட பெத்தி செமினார் பள்ளி மாணவர்கள் ஆதித்யா, சேந்தன், சாஹிது ஹுசைன், ஆதித்யா பள்ளி மாணவர்கள் ஹரி பாலாஜி, ஜோனிஷ் முஹிந்தர், குளூனி பள்ளி மாணவி ஆதிரா, அம்ரிதா பள்ளி மாணவர் கவுதமன், இமாக்கு லேட் பள்ளி மாணவி சாஷிதா, கே.வி., பள்ளி மாணவன் ஈஸ்வரமூர்த்தி, குருகுலம் பள்ளி மாணவன் அகிலேஷ் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் ஆதிப், ஸ்ரீஹரி வாசன், முசைனா, நறுமுகை ஆகிய மாணவர்களை புதுச்சேரி ஒலிம்பியன் டேக்வாண்டோ சங்கத்தின் தலைவரும், அரசு கொறடா ஆறுமுகம், உபகரணங்கள் வழங்கி, வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.
நிகழ்ச்சியில், டேக்வாண்டோ சங்க நிறுவனர் சிட்டிபாபு, செயலாளர் தினேஷ்குமார், சர்வதேச நடுவர் செல்வமுத்து செயலாளர்கள் ஆனந்த், பிரபாகரன், ராஜ்மோகன், பாண்டியராஜ், ஹேமசங்கர் நிர்வாகி தமிழ் ஆகியோர் பங்கேற்றனர்.
