/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய கைப்பந்து போட்டி புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்பு
/
தேசிய கைப்பந்து போட்டி புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்பு
தேசிய கைப்பந்து போட்டி புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்பு
தேசிய கைப்பந்து போட்டி புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்பு
ADDED : பிப் 06, 2024 06:02 AM

புதுச்சேரி : ராஜஸ்தானில் தேசிய கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த, மாணவர்களை வழி அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.
ராஜஸ்தானில் நடக்கும், தேசிய கைப்பந்து விளையாட்டு போட்டியில், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த, 16மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அந்த போட்டியில், பங்கேற்க உள்ள மாணவர்களை, கைப்பந்து விளையாட்டு சங்க செயலாளர் நாராயணசாமி, பயிற்சியாளர் சிவா, புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து வழி அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வில், புதுச்சேரி பா.ஜ மாநில செயலாளர் வெற்றிச்செல்வம் பங்கேற்றுவாழ்த்தினார்.
அரியாங்குப்பம் மாவட்ட பா.ஜ பொதுச்செயலாளர் அய்யனார், பயிற்சியாளர் வீரா மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.