/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமராஜர் கல்வி நிதி கிடைக்காமல் புதுச்சேரி மாணவர்கள் பரிதவிப்பு
/
காமராஜர் கல்வி நிதி கிடைக்காமல் புதுச்சேரி மாணவர்கள் பரிதவிப்பு
காமராஜர் கல்வி நிதி கிடைக்காமல் புதுச்சேரி மாணவர்கள் பரிதவிப்பு
காமராஜர் கல்வி நிதி கிடைக்காமல் புதுச்சேரி மாணவர்கள் பரிதவிப்பு
ADDED : நவ 10, 2025 11:43 PM
புதுச்சேரி: 'சென்டாக்' மூலம் தனியார் கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்கள், காமராஜர் கல்வி நிதி கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்காக, காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத்தை கொண்டு வந்தார்.
இத்திட்டத்தின் கீழ், மையப்படுத்தப்பட்ட மாணவர் சேர்க்கை குழுவான, 'சென்டாக்' மூலம் தனியார் கல்லுாரிகளில் சேரும் மாணவர்களுக்கு, கவ்வி கட்டணத்திற்கு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.
எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு, 2.25 லட்சம், பி.டெக்., படிப்பிற்கு, 25,000, நர்சிங் படிப்பிற்கு, 8,000 ரூபாய் என, ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தால் ஏழை மாணவர்களின் உயர் கல்வி கனவு நனவாகி வருகிறது.
காலத்தோடு வழங்கப்பட்டு வந்த காமராஜர் கல்வி திட்ட நிதியுதவி, 2022 முதல் சேர்ந்த மாணவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.
அதே நேரத்தில், 2021ம் ஆண்டை சேர்ந்த மாணவர்களுக்கு நிதியுதவி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த, 2022ம் கல்வியாண்டில் சேர்ந்த இன்ஜினியரிங் உள்ளிட்ட மாணவர்கள் இறுதியாண்டிற்கு வந்துவிட்டனர். சில மாதங்களில் இறுதி செமஸ்டர் எழுதி படிப்பை முடிக்க உள்ளனர்.
ஆனால், இன்னும் காமராஜர் கல்வி திட்ட நிதியை கல்லுாரிகளுக்கு, அரசு விடுவிக்கவில்லை. அதனால், கல்லுாரி நிர்வாகங்கள் கல்வி கட்டணத்தை ஒரு மாதத்திற்குள் கட்டுமாறு மாணவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.
இதனால், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ மாணவர்கள் கணிசமான தொகையை ஒரே நேரத்தில் கட்ட வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.

