/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ்காரரிடம் வாக்குவாதம்: போதை வாலிபரின் வீடியோ 'வைரல்'
/
போலீஸ்காரரிடம் வாக்குவாதம்: போதை வாலிபரின் வீடியோ 'வைரல்'
போலீஸ்காரரிடம் வாக்குவாதம்: போதை வாலிபரின் வீடியோ 'வைரல்'
போலீஸ்காரரிடம் வாக்குவாதம்: போதை வாலிபரின் வீடியோ 'வைரல்'
ADDED : நவ 10, 2025 11:25 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் போக்குவரத்து போலீசாரிடம், வாலிபர் ஒருவர் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி, நேரு வீதி- அண்ணா சாலை சந்திப்பு சிக்னல் அருகே குடிபோதையில் வாலிபர் ஒருவர்,சாலையில் செல்லும் பொதுமக்கள் மீது எச்சில் துப்பியதோடு,தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதுகுறித்து சாலையில் சென்றவர்கள், அங்கிருந்த போக்குவரத்து போலீஸ்காரரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸ்காரர் மதுபோதையில் இருந்த வாலிபரை அங்கிருந்து போகும்படி அறிவுறுத்தினார்.
ஆனால் போதை வாலிபர் யார் சொன்னாலும் போக மாட்டேன் இங்கேதான் நிற்பேன்என்றும், யார் வேண்டுமானாலும் வரட்டும் எனக்கு கவலை இல்லை என போலீஸ்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்த பெரியகடை போலீசார் சம்பவத்திற்கு வந்து போதை வாலிபரை அங்கிருந்து ஸ்டேஷன் அழைத்து சென்றனர். இதற்கிடையே, போலீஸ்காரரிடம் போதை வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

