/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அங்கன்வாடி கட்டடம் முதல்வர் திறந்து வைப்பு
/
அங்கன்வாடி கட்டடம் முதல்வர் திறந்து வைப்பு
ADDED : நவ 10, 2025 11:25 PM

புதுச்சேரி: சுப்பையா நகரில் அங்கன்வாடி கட்டடத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
தட்டாஞ்சாவடி தொகுதி சுப்பையா நகரில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் அரசாணை பெறப்பட்டு, பொதுப்பணித் துறை மூலம் ரூ.19.70 லட்சம் செலவில் கட்டடம் கட்டப்பட்டது.இக்கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
முதல்வர் ரங்கசாமி கட்டடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநர் முத்துமீனா, குழந்தை நல திட்ட அதிகாரி பாலாஜி, பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், கட்டடங்கள் சாலைகள் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் வைத்தியநாதன், உதவி பொறியாளர் சீனிவாசரம், ஊர் பிரமுகர் பத்மநாபன், தலைவர்கள் நாகராஜன், செல்வராஜ், அங்கன்வாடி ஊழியர்கள் தேன்மொழி, உதவி கிளாரா, தமிழரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

