/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சகுரா திட்டத்தில் பங்கேற்க புதுச்சேரி மாணவர்கள் ஜப்பான் பயணம்
/
சகுரா திட்டத்தில் பங்கேற்க புதுச்சேரி மாணவர்கள் ஜப்பான் பயணம்
சகுரா திட்டத்தில் பங்கேற்க புதுச்சேரி மாணவர்கள் ஜப்பான் பயணம்
சகுரா திட்டத்தில் பங்கேற்க புதுச்சேரி மாணவர்கள் ஜப்பான் பயணம்
ADDED : ஆக 12, 2025 01:45 AM

புதுச்சேரி: சகுரா அறிவியல் பரிமாற்ற திட்டத்தில் பங்கேற்பதற்காக, புதுச்சேரி மாணவர்கள் ஜப்பானிற்கு கலாச்சார பயணமாக புறப்படுகின்றனர்.
ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகமை மூலம் சகுரா திட்டம் செயல்படுகிறது. இந்த திட்டம் மூலம், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள திறமையான மாணவர்கள், இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஜப்பானின் அறிவியல், தொழில்நுட்பம், கலாச்சாரத்தை நேரடியாக அறியும் வாய்ப்பை வழங்குகிறது.
இதன் மூலம் மாணவர்கள், ஜப்பானில் உள்ள முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், விஞ்ஞான மையங்களை பார்வையிடுகின்றனர். சகுரா திட்டத்தில் பங்கேற்க புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஆர்வமுள்ள மாணவர்கள், ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இவர்களின் கல்வி திறமை, இன்ஸ்பையர் ஆகிய அறிவியல் திட்டங்கள், கண்காட்சி மற்றும் பிற செயல்பாடுகளில் பங்கேற்பு அடிப்படையில் குழு உறுப்பினர்கள் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்குநரகம் மூலம், ஜப்பான் அரசின் சகுரா மாணவர் பரிமாற்ற திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்கள், இளங்கோ அடிகள் அரசு மேல்நிலை பள்ளி தேவன், இந்திராகாந்தி அரசு மேல்நிலை பள்ளி நிவேதா, மறைமலையடிகள் அரசு மேல்நிலை பள்ளி விரிவுரையாளரான வழிகாட்டி ஆசிரியர் பிரியதர்ஷினி ஆகியோர், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கல்வித்துறை இயக்குனர் அமன் ஷர்மா, இணை இயக்குநர் (பள்ளிக்கல்வி) சிவகாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த மாணவர்கள், ஆசிரியர் வரும் 16ம் தேதி மாலை 6.00 மணிக்கு டில்லி விமான நிலையத்திற்கு புறப்பட்டு, 17 ம் தேதி காலை 5.55 மணிக்கு ஜப்பான், டோக்கியோ சென்றடைகின்றனர். இவர்கள், மீண்டும் வரும் 23ம் தேதி காலை 11.10 மணிக்கு டோக்கியோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அன்று மாலை 4.30க்கு டில்லி வந்தடைகின்றனர்.
இவர்கள், புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு டில்லி செல்லும் பயண செலவு, புதுச்சேரி அரசு மூலம் வழங்கப்படுகிறது. தில்லி - ஜப்பான் வரை விமான பயணம், தங்குமிடம், உணவு, அங்குள்ள பயண செலவுகள், மத்திய அரசு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

