/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி டேக்வாண்டோ வீரர்கள் ஒடிசா பயணம்
/
புதுச்சேரி டேக்வாண்டோ வீரர்கள் ஒடிசா பயணம்
ADDED : ஆக 28, 2025 02:03 AM

புதுச்சேரி: இந்திய டேக்வாண்டோ சார்பில், 4வது தேசிய சப் ஜூனியர் மற்றும் சீனியர் குறுகி மற்றும் பூம்சே டேக்வாண்டோ போட்டிகள் இன்று (28ம் தேதி) துவங்கி செப்டம்பர் 2ம் தேதி வரை நடக்கிறது.
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் போட்டிகளில் அங்கீகாரம் பெற்ற டேக்வாண்டோ மாநில சங்கங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.
புதுச்சேரி ஒலிம்பியன் டேக்வாண்டோ சங்கத்தின் சார்பாக போட்டியில் பங்கேற்கும் புதுச்சேரி அணி தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டது. அதில், தேர்வான வீரர்களுக்கு வாழ்த்தி வழி அனுப்பும் நிகழ்ச்சி புதிய பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது.
சங்க செயலாளர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். புதுச்சேரி ஒலிம்பியன் டேக்வாண்டோ சங்க தலைவரும், அரசு கொறடாவுமான ஆறுமுகம் கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளுக்கு உபகரணங்கள் வழங்கி வாழ்த்தினார்.
புதுச்சேரி டேக்வாண்டோ நிறுவனர் சிட்டிபாபு, சர்வதேச நடுவர் செல்வமுத்து, கிளை செயலாளர்கள் ஆனந்த், பிரபாகரன், ராஜ்மோகன், ஹேமசங்கர்,சங்க உறுப்பினர்கள் ராஜ்குமார், பிரிதேஷ், கமலேஷ், லோகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அணியின் பயிற்சியாளராக மோகனபிரியன் மற்றும் மேலாளராக சுவேதா ஆகியோர் வீரர்களுடன் செல்கின்றனர்.