ADDED : ஆக 28, 2025 02:03 AM

திருக்கனுார்: குமாரப்பாளையத்தில் நடந்த ஈஷா கிராமோற்சவம் எறிப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பரிசுகள் வழங்கினார்.
கோயம்புத்துார் ஈஷா யோகா பவுண்டேஷன், குமாரப்பாளையம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், 17ம் ஆண்டு மகளிர்களுக்கான 'ஈஷா கிராமோற்சவம்' மாநில அளவிலான எறிப்பந்து போட்டிகள் நடந்தது.
இதில், திருக்கனுார், குமாரப்பாளையம், கைக்கிலப்பட்டு, சுத்துக்கேணி, கரியமாணிக்கம், பி.எஸ்.பாளையம், சந்தை புதுக்குப்பம், ஆரோவில், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கம், மரக்காணம், கும்மிடி பூண்டி பகுதிகளை சேர்ந்த 27 மகளிர் அணிகள் கலந்து கொண்டன.
இதற்கான இறுதி போட்டியில், ஆரோவில் பகுதியை சேர்ந்த ஆரோபில் அணியும், குமாரப்பாளையம் ஏ.பி.ஜே., குயின்ஸ் அணியும் மோதின. இதில், ஆரோவில் அணி முதலிடம் பெற்றது.
தொடர்ந்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார். பா.ஜ., பிரமுகர் முத்தழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.போட்டியில், பங்கேற்ற திருமணமான மகளிர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை, போட்டி ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம், குமாரப்பாளையம் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் வாரியர்ஸ் விளையாட்டு கழகத்தினர் செய்திருந்தனர்.