/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரெஞ்சியர்களுக்கு நெசவு தொழில் கற்றுக்கொடுத்த புதுச்சேரி
/
பிரெஞ்சியர்களுக்கு நெசவு தொழில் கற்றுக்கொடுத்த புதுச்சேரி
பிரெஞ்சியர்களுக்கு நெசவு தொழில் கற்றுக்கொடுத்த புதுச்சேரி
பிரெஞ்சியர்களுக்கு நெசவு தொழில் கற்றுக்கொடுத்த புதுச்சேரி
ADDED : ஜூன் 22, 2025 01:54 AM
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதுச்சேரி வரலாற்றை பின்னோக்கி பார்த்தால், புதுச்சேரி நெசவு தொழிலில் கோலோச்சி உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததை காண முடிகிறது.
அரிக்கமேட்டில் இருந்த சாய தொட்டிகளே இதற்கு இன்றைக்கும் மவுன சாட்சிகளாக உள்ளன. அடுத்து வந்த பிரெஞ்சியர்களும் புதுச்சேரியின் நெசவு தொழிலில் வளமை கண்டு, அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றனர்.
புதுச்சேரியில் தயாரிக் கப்பட்ட துணிகள், ஆயத்த ஆடைகள் பிரான்ஸ் உள்பட பல்வேறு நாட்டிற்கும் கொண்டு செல்லப்பட்டன. ஆனால் இதற்கான செலவுகளும் அதிகம் ஆனது. ஏனெனில் இந்தி யாவில் இருந்து துணிகளை வாங்கி கப்பலில் ஏற்றி சென்று பிரான்ஸ் நாட்டில் இறக்கி, விற்பது என்பது சவாலாகவே இருந்தது.
இந்த நேரத்தில் தான் பிரெஞ்சு கப்பற்படை தலைவர் அட்மிரல் சுய்ப்ரேன் வேறு கண்ணோட்டத்தில் புதிய முடிவினை எடுத்தார். புதுச்சேரியில் இருந்து துணியை ஏற்றுமதி செய்வதை காட்டிலும் அதை பிரான்ஸ் நாட்டிலேயே உற்பத்தி செய்தால் என்ன என, பல கணக்குகளை மனதில் போட்டார்.
அந்த ஐடியாவை பிரான்ஸ் மன்னரிடம் சொன்னார். அரசரிடம் இருந்து கிரீன் சிக்னலும் கிடைத்தது. அதையடுத்து 1788ல் அரசரின் அனுமதியுடன் 60 நெசவாளர்களையும், அவர்களுக்கு உதவதற்காக லுாயி பிரகாசம் என்ற மொழி பெயர்ப்பாளரையும் மூன்று ஆண்டு கால ஒப்பந்தத்தில் புதுச்சேரியில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்து சென்றார்.
இவர்கள் வாயிலாக பிரான்ஸ் இளைஞர்களுக்கு நெசவு தொழில் கற்றுக்கொடுத்து அவர்களை தேர்ந்த நெசவாளர்களாக்குவதே அவர்களுக்கு முதன்மையாக இலக்கு கொடுக்கப்பட்டது. தகதகவென கழுத்தில் ஜொலித்த நகைகளோடு கப்பலில் வந்து இறங்கிய இந்தியர்களை பிரெஞ்சியர்கள் வினோதமாக பார்த்தனர். பாரிஸ் நகரில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள தியூ என்ற ஊரில் அவர்கள் குடியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு வேளாவேலைக்கு அரிசி சோறு, அவ்வப்போதும் ரொட்டி, ஒயினும் கொடுக்கப்பட்டு நெசவு தொழில் கற்றுக்கொடுக்க பணிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் ஆர்வமாக வந்த உள்ளூர் இளைஞர்கள் அதன் பிறகு சோர்ந்து போனார்கள். கடினமாக உழைக்க கூடிய நெசவு தொழில் மீது அவர்களுக் கும் ஆர்வம் குறைந்தது. அதே வேளையில் நெசவு தொழிலுக்கு உயிர் நாடியான தரமான பஞ்சும் கிடைக்கவில்லை. எதிர்பார்த்த அளவிற்கும் தர மான துணிகளை உற் பத்தி செய்யப்படவில்லை.
இதனால் மூன்று ஆண்டு ஒப்பந்தம் முடிந்ததும் இந்தியாவிற்கு கப்பலில் திருப்பி அனுப்பப்பட்டனர். சுய்ப்ரேனில் உள்நாட்டு உற்பத்தி கனவும் கனால் நீரானது. இந்த வரலாற்று சம்பவத்தை வீரா நாயக்கர் தனது 1788 ஜூலை 21ம் தேதியில் நாட்குறிப்பில் பதிவிட்டுள்ளார்.
அதில் சுய்ப்ரேன் தன் பதவிக்காலம் முடிந்து பிரான்ஸ் திரும்பும்போது தமிழ் கைக்கோளர்கள் பலரை மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் மாந்ர எனும் தீவுக்கு நெசவு தொழில் கற்பிதற்காக அழைத்து சென்றார். தன் செலவிலேயே திரும்பவும் புதுச்சேரிக்கு கொண்டு வருவதாகவும் உறுதியளித்தார்.
ஜீவனத்திற்கு வழியில்லாமல் இருந்தவர்கள், வீணாய் இறந்துபோவதைவிட எங்காவது போய் ஜீவனை காப்பாற்றி கொள்ளலாம் என, துணிந்து சீமைக்கு போக சம்மதித்து போனார்கள். இன்றைய நாள் புருஷன் பெண்டுகள், பிள்ளைகள், 50 சனங்கள் கப்பலில் புதுச்சேரி நகர துறைமுகத்தில் வந்து இறங் கினார். உடன்படிக்கை தப்பாமல் யுரேப்பு தேசத்தில் இருந்து தன்னுடைய செலவிலே மறுபடியும் திருப்பி அனுப்பிவிட்டார் என்று சுய்ப்ரேனையும் பாராட்டி பதிவு செய்துள்ளார்.
அந்த காலத்தில் புதுச்சேரியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு அடிமை வணிகம் நடந்தது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்ப குடும்பமாக பல்வேறு நாடுகளுக்கும் தீவுகளுக்கும் அனுப்பப்பட்ட வேளையில், புதுச்சேரி யில் இருந்து நெசவு தொழி லாளர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு அடிமைபோல் செல் லாமல் பயிற்சியாளர்கள் போன்று சென்று கற்றுகொடுத்துவிட்டு திரும்பியது உண்மையில் வரலாற்று அதிசயம் தான்.